Search This Blog

Friday, 8 March 2013

நான் : உலகினில் மிக உயரம், மனிதனின் சிரு இதயம்

உலகினில் மிக உயரம், மனிதனின் சிரு இதயம் 
நினைவுகள் பல சுமக்கும், நிஜத்தினில் எது நடக்கும்

விரல் நீட்டும் திசையில், ஓடாது நதிகள்
நதி போகும் திசையில் நீ ஓடு

உன்னை வாட்டி எடுக்கும், துன்பம் நூறு இருக்கும்
தடை நூறு கடந்து போராடு

உலகினில் மிக உயரம், மனிதனின் சிரு இதயம் 

கடலினில் கலந்திடும் துளியே
கவளை எதுக்கு
அலையுடன் கலந்து நீ ஆடு
வாழ்கை உனக்கு

உறவுகள் இனி உனக்கேதுகு
உலகம் இருக்கு
வலிகளை தாங்கிடும் கல்லில்
சிலைகள் இருக்கு


அலைகள் அலக்கழிக்கம் ஓடம் தான்
கடலை தாண்டி வந்து கரையேறும்

ஊசி துளைக்கும் துணி மட்டும் தான்
உடுத்தும் ஆடை என்று உருவாகும்
இருளில் இருந்து வெளிச்சம் பிறக்கும் எப்போதும்
(உலகினில் மிக உயரம்)


கனவுகள் சுமந்திடும் மனமே, உறக்கம் எதற்கு
இருக்குது உனக்கொரு பாதை, நடக்க தொடங்கு

தயக்கங்கள் இனி உனக்கேதுகு, துனிந்த பிரகு
நடப்பது நடக்கட்டும் வாழ்வில, கடக்க பலகு


இடிகள் இடிக்கும் அந்த வானம் தான்
உடைந்து விழுவதில்லை எப்போதும்
அடியை தாங்கி கொல்லும் நெஞ்சம் தான்
அடுத்த அடியை வைத்து முன்னேரும்


நினைப்பின் படியே எதுவும், நடக்கம் எப்போதும்

உலகினில் மிக உயரம், மனிதனின் சிரு இதயம் 
நினைவுகள் பல சுமக்கும், நிஜத்தினில் எது நடக்கும்
(விரல் நீட்டும்)


உன்னை வாட்டி எடுக்கும், துன்பம் நூறு இருக்கும்
தடை நூறு கடந்து போராடு